Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய்த்தொற்றை நிவாரண நிதி அடுத்த 2000 எப்போது? ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்காக அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி அதன் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது கடந்த 15ஆம் தேதி ஆரம்பம் ஆனது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்குள் இரண்டாம்கட்ட தவணை நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அத்துடன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழகம் கேட்ட தடுப்பூசிகளை இதுவரையில் மத்திய அரசு கொடுக்கவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்காக மத்திய அரசுக்கு நாம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். விரைவாக தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்

Exit mobile version