பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்!

0
133

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த பீஸ்ட் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கில் வெளியான தோழா படத்தை டைரக்டு செய்தவர் ஆவார். இதன் மூலம் விஜய் தனது 66-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் என கூறப்படுகிறது.

விஜய்யின் 66-வது படம் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்கவில்லை எனவும் இந்த படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நெகிழ்ச்சியோடு கூறியதாக தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும், படத்தை தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவோம்  என்று அவர் தெரிவித்துள்ளார்.