ஃப்ரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த பொருளை கொண்டு சுத்தம் செய்யுங்கள்!!

0
261

அனைவரின் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி என்பது அத்தியாவசியமான பொருளாகிவிட்டது. அதில் காய்கறிகள் பழங்கள் மற்றும் சில உணவு பொருட்கள் போன்றவற்றை கெடாமல் இருக்கவும், பிரஷ்ஷாக இருக்கவும் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் பிரிட்ஜில் வைத்துள்ள ஏதோ ஒரு பொருளின் வாசனை மற்ற பொருட்களின் மீதும் வீசும் அதாவது நாம் ஏதேனும் பழங்களை வைத்து அதன் பக்கத்திலேயே குழம்பைம்போ அல்லது தண்ணீரோ வைத்திருந்தால் அந்த பழத்தின் வாசனை குழம்பு அல்லது தண்ணீரில் வீசும்.

இது போன்ற வாசனைகளை நீக்கவும், ஃபிரிட்ஜிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்கவும் சில பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்தாலே போதும் உங்கள் ஃப்ரிட்ஜ் நறுமணமாக இருக்கும்.

ஃப்ரிட்ஜை மாதத்திற்கு ஒரு முறையாவது துடைக்கவேண்டும் வேண்டும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பிரிட்ஜை முழுவதுமாக கழுவ வேண்டும்.

துடைக்கவும் கழுவவும் சில பொருட்களை பயன்படுத்தினால் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வதற்கு முன்பு அதிலுள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்துவிட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஃப்ரிட்ஜை வெறும் சோப்பு நீரில் கழுவக் கூடாது.

டீ டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து சூடுபடுத்தி அதில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட்டு சிறிதளவு சோப்பு துளைபோட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் வெறும் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த எலுமிச்சம் சாறு கலந்த தண்ணீரை கொண்டு முதலில் தேய்த்துவிட்டு அடுத்தப்படியாக வெறும் நீரில் துடைக்க வேண்டும்.

நீரை கொதிக்க வைத்து அதில் ஒரு மூடி வினிகர் விட்டு அதை ஆறும் வரை விட்டு விட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே போன்று உபயோகிக்கலாம்.வினிகர் கலந்த நீரை பிரிட்ஜ் உள் பகுதியில் தெளித்து விட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்தால் சாஸ் கறைகள் போன்ற விடாப்பிடி கறைகளும் போய்விடும்.

ஃப்ரிட்ஜ் Stand-ன் மூலை மூடுக்கெல்லாம் பிரிட்ஜின் கதவுகளின் மூலைகளிலும் விடாப்பிடி கரைகள் இருக்கும். இதனை எதைக் கொண்டு தேய்த்தாலும் அவ்வளவு எளிதில் போகாது.சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து அதிக அளவு எலுமிச்சை சாறை பிழிந்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். அதனை டூத் பிரஷ் மூலம் கறை உள்ள இடத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் விட்டு தேய்த்தால் ஃப்ரிட்ஜின் மூலை முடுக்கில் உள்ள கறைகள் காணாமல் போய் பளிச்சென்று ஆகிவிடும்.

பிரிட்ஜில் வைக்கும் ஒரு பொருளின் வாசம் மற்றொரு பொருளில் வீசுவதை தடுக்க அனைத்து பொருட்களையும் மூடி வைக்க
வேண்டும்.

அடுத்ததாக பழங்கள் மற்றும் பூக்கள் போன்ற வாசனை நிறைந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் உணவுப்பொருட்களை அதாவது பழைய குழம்பு அரிசி மாவு போன்றவற்றை வைப்பது தவிர்க்க வேண்டும் அதற்கு என்று தனியாக ரேக் (Rack) வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரிட்ஜில் மூடிவைக்க உபயோகிக்கப்படும் பொருள் அலுமினியத்தில் இருப்பதைவிட பிளாஸ்டிக்கில் இருப்பது ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளிற்கு வாசத்தை கடத்தாமல் இருக்கும்