எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

0
110
#image_title

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் தண்ணீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? எந்த வேலை செய்யும் பொழுது குடிக்க வேண்டும்? இதனால் என்ன பயன்கள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

நீரின்றி அமையாது உலகு என்று செல்வார்கள். அதுப்படி உலகத்தில் நீர் இல்லாமல் எந்தவொரு உயிரனமும் வாழ முடியாது. தண்ணீர் என்பது அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

நமக்கு என்னதான் அறுசுவை விருந்து வைத்தாலும் தண்ணீர் இல்லையென்றால் சாப்பிட முடியாது. தண்ணீர் குடிப்பதால் மனிதனுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதாவது ஒரே தடவை 2 லிட்டர் தண்ணீர் குடிக்கக் கூடாது. அவ்வாறு குடித்தால் தண்ணீர் நமக்கு எமன் தான். ஆகவே ஒருநாளுக்கு சிறிது சிறிதாக சிறிய இடைவெளிக்கு பின்னர் என்று 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல நன்மைகளை தரும் இந்த தண்ணீரை எந்தெந்த வேலை செய்யும் பொழுது குடிக்கலாம் அவ்வாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தண்ணீர் அருந்தும் வேலைகளும் அதன் நன்மைகளும்…

* நாம் காலையில் எழுந்த பிறகு தண்ணீர் குடிப்பதால் உள் உறுப்புகள் நன்கு செயல்படும்.

* நாம் எடுக்கும் பயிற்சிகள் முடிந்த பிறகு தண்ணீர் குடித்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதயத் துடிப்பை இயல்பு நிலைக்கு கண்டு வர உதவி செய்யும்.

* சாப்பாடு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

* நாம் குளிக்கச் செல்லும் முன்னர் தண்ணீர் குடித்தால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கின்றது.

* நாம் தூங்கச் செல்லும் முன்னர் தண்ணீர் குடித்தால் உடலில் ஏதாவது திரவ இழப்பு இருந்தால் அதை நிரப்ப உதவி செய்கின்றது.

* நமக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது நாம் தண்ணீர் குடிப்பதால் சரியான செயல்பாட்டுக்கு உடலை ஹைட்ரேட் செய்ய உதவி செய்கின்றது.

* நாம் சோர்வாக இருக்கும் பொழுது தண்ணீர் குடிப்பதால் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் அளிக்கின்றது.