2000 ரூபாய் எப்போ தருவாங்க!! ரேஷன் அட்டைதாரார்களுக்கு அடிச்ச லக்!! தேதி அறிவிக்கப்பட்டது!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்று பரவல் காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்விற்கு தேவையானவை கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல்வராக பதவியேற்ற உடனடியாக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். நேற்று ஐந்து திட்டங்களுக்கான ஆவணங்களில் முதல்வர் ஸ்டாலின் கையொப்பம் இட்டிருக்கிறார்.
அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்க வேண்டும் என்ற அறிவிப்பும் ஒன்று. இந்த நிவாரண தொகையை இரண்டு தவணைகளாக அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல் தவணையாக ரூ.2,000ஐ இந்த மாதமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து இன்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது.
இதன் முதல் தவணைத் தொகை ரூ.2,000 வழங்கும் திட்டத்தை வரும் மே 10ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். 2.7 கோடி குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை முறையாக சென்றடையும். இதனைக் கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நிவாரணத் தொகை சரியாக சென்று சேருவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்வார்கள். இந்த நிவாரண தொகை, ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழங்கப்படும். முன்னதாக இதற்கான டோக்கன் அனைவருக்கும் முறையாக வழங்கப்படும். ஒருநாளைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.