Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

11 – ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் ? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

11 – ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும் ? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தோற்று அதிகரித்தனால்10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகின.மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை அடிப்படையை கொண்டு மதிப்பெண்களை வழங்கப்பட்ட நிலையில், இடையில் நின்ற மாணவர்கள் 5000 மேற்பட்டோருக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதேபோல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு பாடங்களை ஆன்லைன் மூலமாக படித்து வரும் நிலையில், 11- ஆம் வகுப்பு மாணவர்கள்,பாலிடெக்னிக் மாணவர்கள் மட்டும் இன்னும் பாடங்கள் தொடங்காத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ,11- ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் எப்போது தொடங்கப்படும் என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார்.மேலும் இது குறித்த பதிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுட்டார்.

Exit mobile version