என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள் எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகின்றார்கள் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை? மக்களின் பிரச்சனைகளை கடிதங்களை பெற்ற பெட்டிகள் எங்கே? எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்து விட்டதா? இல்லை பெட்டியே தொலைந்து விட்டதா?
என சீமான் தன்னுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
திமுகதான் வந்தால் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து என்று சொன்னார்கள் .தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சி அமைத்தால் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்று வானளவு அளந்தார்கள்.
50 நாட்களை கடந்து விட்டோம் பாதி காலக்கெடு முடிந்து விட்டது .என்ன செய்திருக்கிறீர்கள்? என்று திமுக கட்சியின் மீது சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.