Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினி போட்டியிடும் தொகுதி இதுதானாம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்து இருக்கின்ற நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது சம்பந்தமாக அரசியல் கட்சியின் வேட்பாளர் தமிழருவி மணியன் விளக்கம் அளித்திருக்கிறார்.

கட்சி ஆரம்பிக்கப் போகும் தேதியை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவிப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கின்றார் அவருடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பாஜகவில் இருந்து வெளிவந்த அர்ஜுன மூர்த்தி மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை அறிவித்திருக்கின்றார் ரஜினிகாந்த் இந்த நிலையில் போயஸ் கார்டனில் நேற்றைய தினம் ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

முதல்வர் வேட்ப்பாளராக தான் இருக்கப்போவதில்லை என ரஜினிகாந்த் முன்னரே அறிவித்து இருக்கின்ற நிலையில் அவரை முதல்வர் வேட்பாளராக இருக்குமாறு அவருடைய நெருக்கமான நண்பர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் இந்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டால் ரஜினிகாந்த் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழருவி மணியன் இடம் இதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன் ரஜினிகாந்த் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவாரா அப்படி போட்டியிட்டால் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை அவர்தான் அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version