உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து நாடுகளும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் இந்த பொது முடக்கத்தால் அங்கு குற்றங்கள் குறைந்துள்ளது. முதல் மூன்று மாதங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 40 சதவிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுபானம் தொடர்பான குற்றங்கள் குறைந்துவிட்டது. மேலும் பாலியல் துன்புறுத்தல், தீச்சம்பவங்கள் உள்ளிட்ட பலவகையான குற்றங்கள் குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிகமாக குற்றங்கள் நடைபெறும் நாடு தென்னாப்பிரிக்காதான் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாதி நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அங்குதான் பதிவாகியுள்ளன.