Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொற்று உறுதியானால் 18 ஆயிரம் அளிக்கும் நாடு?

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 2-ம் கட்டமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தும் 14 நாட்கள் வேலை இழக்கும் நபர்களுக்கு 182 பவுண்டு (ரூ. 17759.60 இந்திய பண மதிப்பில்) வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அதுவும் மிகவும் அதிகமான தொற்று உள்ள இடங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பேர்ன்ஹாம் ‘‘மக்களுக்கு முழுத்தொகை கிடைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் இந்த பணம் போதுமானதாக இருக்காது’’ என்றார்.
Exit mobile version