நீங்கள் மற்றவருடன் பேசும் பொழுது, அவர் நீங்கள் பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? 7% நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகளை கவனிப்பார்கள், 38% நீங்கள் எந்த டோனில் பேசுகிறீர்கள் என்பதை கவனிப்பார்கள், அதாவது நீங்கள் சோகமாக பேசுகிறீர்களா? அல்லது மகிழ்ச்சியாக பேசுகிறீர்களா? கோபத்துடன் பேசுகிறீர்களா? என்பதை கவனிப்பார்கள்.
55% உங்களின் பாடி லாங்குவேஜை வைத்து தான் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதையே புரிந்து கொள்வார்கள். பாடி லாங்குவேஜ் என்பதுதான் அவருடைய மற்றொரு உருவம் என்றே கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் அமரும் விதத்தை பொறுத்து அவர் எத்தகையவர் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. பெரும்பாலும் மக்கள் ஐந்து வித பொசிஷனில் தான் அமருகிறார்கள் என்றும், அந்தந்த பொசிஷனுக்கு ஏற்ற கேரக்டர் அனைத்தும் ஒத்து வருவதாகவும் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது.
Position 1:Crossed Legs
கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் பிஸ்னஸ் மேன், செலிப்ரிட்டிஸ், மேலும் நம்மளுக்கு தெரிந்த சில பேர் கூட இவ்வாறுதான் உட்காருவார்கள். இவ்வாறு உட்காருபவர்களை பார்த்தவுடன் இவர்கள் மிகவும் திமிரு பிடித்தவர்கள் போல என எண்ணுவோம். ஆனால் அது உண்மை கிடையாது. இவர்கள் மிகவும் பாசிட்டிவ் மற்றும் கான்ஃபிடன்ட்டாக இருப்பவர்கள்.
இவர்கள் அவ்வளவு எளிதில் மற்றவருடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தால் கூட மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் யாரிடமும் அவ்வளவாக எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ரொம்ப சீக்ரெட் பர்சன் ஆக இருப்பார்கள். யாரின் மீதும் இவர்கள் பெரியதாக நம்பிக்கை வைக்க மாட்டார்கள். எனவே அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாகவே இருப்பார்கள். யாருக்காகவும் நேரத்தை செலவிட மாட்டார்கள். ஒரு இடத்திற்கு சரியான நேரத்தில் மற்றவர்கள் வரவில்லை என்றால் மிகுந்த கோபம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
Position 2 :Knees Together Feet Apart
கால் முட்டிகள் இரண்டும் ஒன்றாக சேர்த்து, கால் பாதங்கள் இரண்டும் அகண்டு இருக்குமாறு உட்காருபவர்கள் ஓப்பன் மைண்டட் ஆக இருப்பார்கள். எனவே இவர்களிடம் மிக எளிதில் உறவு வைத்துக் கொள்ளலாம். இவர்கள் அதிகம் பேசாமல் மற்றவர்கள் பேசுவதை அதிகம் கவனிப்பவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனது கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எனவே மற்றவர்களுக்கு பலவிதமான உதவிகளையும் செய்வார்கள்.
ஆனால் இவர்களால் ரொம்ப நேரம் ஒரு செயலை செய்ய முடியாது. ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு மிகுந்த கவலை கொள்வார்கள். ஆனால் அதனை எவ்வாறு சரி செய்வது என யோசிக்கும் பொழுது ‘அது காலப்போக்கில் சரியாகிவிடும்’ என்று கேர் ஃப்ரீ பர்சன் ஆக இருப்பார்கள்.
Position 3:Knees Apart Feet Together
கால் முட்டி இரண்டும் அகண்டு பாதங்கள் இரண்டும் சேர்த்தவாறு அமருபவர்கள் தன்னுடைய பெயர் மற்றவர்களிடம் நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காக வேலை என வந்துவிட்டால் அதில் மிகவும் கவனமாகவும், விரைவில் சரியான முறையில் செய்து முடிப்பவர்கள் ஆகவும் இருப்பார்கள். இவர்கள் யாரிடமும் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக தனக்குள் அதிகம் பேசிக் கொள்வார்கள்.
மற்றவர்கள் யாரும் தன்னை குறை சொல்லிட கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் யோசித்து தான் அனைத்து செயல்களையும் செய்வார்கள். அதாவது ஒருவரிடம் பேசுவதற்கு முன்பாகவே இவ்வாறு பேசினால் அவர்களது மனது புண்படுமா என பலவிதமாக யோசித்து தான் செயல்படுவார்கள். அதாவது இவர்களை மிகவும் நல்லவர்கள் என்றே கூறலாம்.
Position 4:Legs Together
முட்டி முதல் பாதம் வரை சேர்த்தவாறு உட்காருபவர்களை மிஸ்டர் பர்ஃபெக்ட் என்றே கூறலாம். ஏனென்றால் இவர்கள் படிப்பாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி மிகவும் பர்ஃபெக்ட் ஆக இருப்பார்கள். கடின உழைப்பை இவர்கள் விரும்ப மாட்டார்கள். அதற்கு பதிலாக கடின உழைப்பையும் எவ்வாறு எளிதான முறையில் செய்வது என்பதை யோசித்து விரைவில் செய்து முடிப்பார்கள். இவர்கள் செய்த சத்தியத்தை காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு யாரேனும் சத்தியம் செய்து விட்டு மீறினால் அவர்களது உறவை முறித்துக் கொள்ளவும் யோசிக்க மாட்டார்கள். இவர்களது குடும்ப உறவில் யாரிடமேனும் சண்டை ஏற்பட்டால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதையும் அறிந்தவர்களாக இருப்பார்கள்.
Position 5:Legs Together Tilted On One Side
கால்கள் இரண்டையும் சேர்த்து ஒரு பக்கமாக சாய்த்தவாறு உட்காருபவர்கள் விதி என்பதை நம்புபவர்களாகவும், லக்கி என்பதை நம்புபவர்களாகவும் இருப்பார்கள். விதி மற்றும் லக்கியின் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லாதபோதும், இவர்கள் பெரிதாக நம்புவார்கள். மேலும் இதில் வெற்றியும் காண்பார்கள். இவர்களை இப்படி இரு, அப்படி இரு என்று அட்வைஸ் செய்தால் இவர்களுக்கு பிடிக்காது. ஏனென்றால் இவர்களது வாழ்க்கையை இவர்களுக்குப் பிடித்தவாறு வாழ விரும்புவார்கள்.
இவர்கள் உடுத்தக்கூடிய உடை மற்றும் இடத்தை சுத்தமாகவும், சரியான முறையிலும் வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். இவர்களது வாழ்க்கையில் குறிக்கோள் என்று ஏதேனும் எடுத்துக் கொண்டால் அதற்கு இடையில் யார் வந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களது குறிக்கோளை நோக்கி மட்டுமே ஓடுவார்கள். இவர்களது லட்சியத்திற்கு யாரேனும் உதவி செய்தால் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையை வைப்பார்கள். கணவன் மனைவி உறவு என வந்தால் இவர்களைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அன்பை காட்ட முடியாது.