Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா?

Which movie is a failure? Brave or not heir?

Which movie is a failure? Brave or not heir?

தோல்வி அடையும் படம் எது? துணிவா இல்லை வாரிசா?

துணிவு:

போனிகபூர் தயாரிப்பில்,எச்.வினோத் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் தயாராகி கடந்த 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சுவாரியர்,ஜான் கொகேன்,நயனா சாய்,ஜி.எம்.சுந்தர்,மகாநதி சங்கர்,சமுத்திரக்கனி,பகவதி பெருமாள் அஜய் மற்றும் வீரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மேலும் நீரவ் ஷா தான் இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 வாரிசு:

தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்,தில்ராஜி தயாரிப்பில்,விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான  திரைப்படம் தான் வாரிசு.இந்த படத்தில் சரத்குமார், யோகிபாபு,ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படம் அப்பா மகன் இடையே நிகழும் பிரச்சனை தான்.மேலும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு உலகின் அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடி வருகின்றது.ஆனால் கேரளாவில் முதல் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கு காரணம் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலிஸ் ஆனதுதான் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.வாரிசு திரைப்படம்  10 கோடி கூட வசூல் வராது என்ற நிலை உள்ளது.ஆனால் விஜயின் மற்ற படங்கள் அனைத்துமே 10 கோடி வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version