Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்பட்டா பரம்பரையுடன் மோதும் சந்தானம்?! தீபாவளியில் டிஷ்யூம் டிஷ்யூம்!!

தீபாவளிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22 ல் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. சென்னையில் 1970 காலகட்டத்தில் இருந்த ராயபுரம் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையேயான குத்து சண்டை போட்டிகளை மையமாக வைத்து எடுத்த இப்படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கத்தில் செப்டம்பர் 10ல் ஓடிடி தளத்தில் வெளியானது “டிக்கிலோனா’ திரைப்படம்.

காலப்பயணத்தை மையமாக கொண்ட இந்த நகைச்சுவை திரைப்படத்தில் சந்தானம், அனகா, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது “டாக்டர்” திரைப்படம். இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் டார்க் ஹயூமர் காட்சி அமைப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இத்திரைபடத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மூன்று திரைப்படங்களும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version