சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்

0
399
#image_title

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்

நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் எவ்வாறு அத்தியாவசியமோ அது போல எண்ணெயும் அத்தியாவசியமாக உள்ளது. நம் சமையலில் எண்ணெய் என்பது அத்தியாவசியமாக மாறியுள்ளது.

எண்ணெய் இல்லாமல் எந்த சமையலும் நடக்காது என்ற அளவிற்கு எண்ணெய் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி பயன்படுத்தப்படும் எண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது, நல்ல சமையல் எண்ணெயை எவ்வாறு தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.

சமையல் எண்ணெய் என்றால் என்ன..?

சமையல் எண்ணெய் என்பது ஒன்றுமில்லை. நாம் சாப்பிடக் கூடிய உணவுகளில் எண்ணெய் சத்துகள் அதிகம் உள்ளது. இதில் எண்ணெய் என்பதை பிரித்து எடுக்கலாம். இந்த எண்ணெய் என்பதை பொதுவாக ஆயில் என்றோ அல்லது சமையல் எண்ணெய் என்றோ அழைக்கின்றனர்.

உதாரணமாக கடலையில் இருந்து கடலை எண்ணெய், தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணெய், எள்ளிலிருந்து எள் எண்ணெய் போல பல எண்ணெய் வித்துக்களில் இருந்து பல எண்ணெய் வகைகளை பிரித்து சமையலுக்கு தகுந்த மாதிரி பயன்படுத்துகிறோம்.

எண்ணெயில் உள்ள சத்துக்கள்

பொதுவாக எண்ணெயில் விட்டமின்ஸ், மினரல்ஸ், அதிகப்படியாக கொழுப்புகள் நிறைந்துள்ளது. இந்த கொழுப்புகளை பற்றி நாம் தெரிந்து கொண்டாலே ஒரு நல்ல எண்ணெயை நாம் சமையலுக்கு தேர்வு செய்து விடலாம். கொழுப்புகள் பொதுவாக மூன்று வகைப்படும். நல்ல கொழுப்புகள், கெட்ட கொழுப்புகள், மாற்று கொழுப்புகள் என மூன்று வகைப்படும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயில் இந்க மூன்று கொழுப்புகளுமே இருக்கிறது. இந்த கொழுப்புகளில் நல்ல கொழுப்புகள் எந்த எண்ணெயில் அதிக அளவில் இருக்கிறதோ அந்த எண்ணெய்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த எண்ணெய்களை பற்றி பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

இன்றைய தினம் வரை மக்கள் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களில் தோங்காய் எண்ணெய் ஒன்று. இதில் நல்ல கொழுப்புகள் அதிக அளிவில் உள்ளன. நல்ல கொழுப்புகள் எளிதில் ஜீரனமாகக் கூடியவை. தேங்காய் எண்ணெய்யானது வாய்ப்புண்களை குணமாக்கும். தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும். உடலுக்கு தேவையான நோயெதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.

பாமாயில்

பாமாயில் என்பது இரண்டு வகைப்படும். பாம் எனப்படும் கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு வகை ஆகும். இந்த எண்ணெயில் கிட்டதட்ட 86 சதவீதம் கெட்ட கொழுப்புகள் உள்ளது. அதன் சதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மற்றொரு வகை பாமாயிலில் 52 சதவீதம் கெட்ட கொழுப்புகள் உள்ளது. எனவே பாமியிலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளதால் இது சமையல் செய்ய ஏற்றது இல்லை.

கடலை எண்ணெய்

நிலக்கடலையில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதனை கடலை எண்ணெய் என்று அழைக்கிறோம். இந்த கடலை எண்ணெயில் வெறும் 18 சதவீதம் மட்டீம் தான் கெட்ட கொழுப்பீகள் உள்ளது. மீதி 82 சதவீதம் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இதனால் கடலை எண்ணெய்யை பயம் இல்லாமல் சமையலுக்கு பயன்படுத்தலாம்.

எள் எண்ணெய் (OR) நல்லெண்ணெய்

கருப்பு எள் வெள்ளை எள் என இரண்டு வகைப்படும் எள்ளிலிருந்து எள் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. எள் எண்ணெய்யை நல்லெண்ணெய் என்றும் அழைப்பர்.

பெயரிலேயே நல்லதை கொண்டுள்ளது இந்த எள் எண்ணெய். அது போலவே முழுக்க முழுக்க நம் உடலுக்கு நல்ல கொழுப்புகளை தரக்கூடியது நல்லெண்ணெய். இதில் 86 சதவீதம் நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளது.

இந்த நல்லெண்ணெய் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது. நம் பற்களை உறுதிப்படுத்திகறது. இதய நோய் வராமல் தடுக்கின்றது. செரிமானத்தை சீராக்க வைத்திருக்க உதவி செய்கிறது.

நம் உடலில் மெட்டபாலிஸிஸை சீராக வைத்திருக்க உதவி செய்கின்றது. ஆகவே நல்லெண்ணெய்யை சமையலுக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி பூவின் விதைகளில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இன்றைய தினங்களில் அனைவருடைய வீடுகளிலும் சூரியகாந்தி எண்ணெய் பலவிதமான பெயர்களில் இருக்கும். இந்த சூரியகாந்தி எண்ணெயில் அதிக அளவு நன்மை தரக்கூடிய கொழுப்புகள்தான் உள்ளது. மேலும் விட்டமின் இ இந்த சூரியகாந்தி எண்ணெயில் இருக்கின்றது.

ஆனால் இந்த எண்ணெயை பயன்படுத்துவதில் பெரிய சிக்கல் இருக்கிறது

நமக்கு சந்தைகளில் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் அதாவது. ரீஃபைன்ட் சன்பிளவர் ஆயில் தான் கிடைக்கின்றது. இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் சத்துக்கள் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றது. எனவே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து மரச் செக்கின்.மூலம் அரைக்கப்படும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆலிவ் ஆயில் (OR) ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கு மிக நல்லது. மேலும் இதயம் சம்பத்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும். ஏனென்றால் ஆலிவ் எண்ணெயில் 78 சதவீதம் நல்ல கொழுப்புகள் உள்ளது.

இது மட்டுமில்லாமல் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த ஒரு எண்ணெய். இந்த ஆலிவ் எண்ணெய் நம் உடலில் உள்ள நல்ல கொழுப்புகளை அதிகரிக்கின்றது. இந்த ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் மரச் செக்கின் மூலம் தான் தயாரிக்கப்படுகிறது.

சந்தைகளில் ஆலிவ் ஆயில் இரண்டு விதங்களில் விற்கப்படுகின்றது. முதல் வகை எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில். இந்த எண்ணெயை நாம் சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்த வேண்டும். இட்லி பொடி, சாலட் இதற்கு எல்லாம் பயன்படுத்துனலாம். இரண்டாவது வகை பியூர் ஆலிவ் ஆயில். இந்த இரண்டாவது வகை எண்ணெயை நாம் எல்லா வகையான சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

நெய்

பாலில் இருந்து பல செயல் முறைகளை கடந்து கிடைக்கும் எண்ணெய் இந்த நெய். நெய்யில் 60 சதவீதம் கெட்ட கொழுப்புகள் உள்ளது. இதனால் நெய்யை அதிக அளவு பயன்படுத்தாமல் சமையலில் சிறிது அளவு பயன்படுத்துவது நம் உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

ஆகவே நம் உடலுக்கு அதிகம் நன்மை தரக்கூடிய எண்ணெய் ஆலிவ் எண்ணெய். ஆனால் இதனை அனைத்து மக்களாலும் வாங்கி பயன்படுத்த முடியாது. அதற்கு மாற்றாக நாம் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெயை வாங்கி பயன்படுத்தலாம்.