Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் எந்த தட்டில் உணவு வைத்து சாப்பிடுறீங்க? வாழ்நாள் அதிகரிக்க.. இனி இந்த தட்டு யூஸ் பண்ணுங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு சமைப்பதற்கு பல வகை பாத்திரங்களை பயன்படுத்துகின்றோம்.அந்த காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு,செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது அலுமியம்,நான்-ஸ்டிக்,பிளாஸ்டிக்,ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அதாவது எவர் சில்வர் போன்றவை புழக்கத்திற்கு வந்துவிட்டது.

காலங்கள் மாற மாற சமைக்க பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களிலும் பெரியளவு மாற்றம் வந்துவிட்டது.தற்பொழுது விதவிதமான பாத்திரங்கள் விற்கப்படுகிறது.நாம் முன்னோர்கள் காலத்தில் பின்பற்றபட்டு வந்த உலோகங்களை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் தற்பொழுது மக்களுக்கு பிளாஸ்டிக்,அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பொருட்கள் மீதான நாட்டம் அதிகரித்துவிட்டதால் உடல் ஆரோக்கியம் மெல்ல மெல்ல பாதிப்பை சந்தித்து வருகிறது.

நாம் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அதேபோல் நாம் பயன்படுத்தும் பொருட்கள் உடலுக்கு கேடுவிளைவிக்காததாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.என்னதான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் நாம் அதை வைத்து சாப்பிடும் தட்டு பிளாஸ்டிக்கில் இருந்தால் அந்த உணவு நமக்கு நஞ்சு உணவாக மாறிவிடும்.

அதன்படி நாம் சாப்பாடு உட்கொள்ள பயன்படுத்தும் பாத்திரத்தை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம்.எந்த தட்டில் உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1)எவர் சில்வர் பிளேட்

நம் வீட்டில் அதிகளவு பயன்படுத்தும் பாத்திரம் எவர் சில்வர்.இது நெடு காலம் உழைக்க கூடியவை என்பதால் மக்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்த எவர் சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.எவர் சிலவர் தட்டில் உணவு வைத்து சாப்பிட்டால் உடல் நலப் பிரச்சனைகள் குணமாகும்.

2)வெள்ளி பிளேட்

விலை உயர்ந்த பாத்திரங்களில் ஒன்று வெள்ளி.இந்த உலோகத்தால் ஆன தட்டில் உணவு வைத்து சாப்பிட்டு வந்தால் மூளை திறன் மேம்படும்.

3)செம்பு பிளேட்

இந்த உலோகத்தால் செய்யப்பட்ட தட்டில் சாப்பிட்டு வந்தால் உடலில் நச்சுக் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.உடல் எடை இழப்பு,வளர்ச்சிதை மாற்றம் மேம்படசெம்பு தட்டில் உணவு வைத்து சாப்பிடலாம்.

4)பீங்கான் பிளேட்

கண்களை கவரும் பீங்கான் பாத்திரங்களால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.இந்த பீங்கான் பாத்திரத்தில் சூடான உணவுகளை வைத்து சாப்பிட்டாலும் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

5)தங்க பிளேட்

நம் முன்னோர்கள் காலத்தில் தங்க உலோகத்தால் ஆன பொருட்கள் அதிகம் பயன்பாட்டில் இருந்தது.உணவு உட்கொள்ள தங்கத்தால் ஆன தட்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது தங்கம் விற்கும் விலைக்கு அதை கனவில் கூட யோசிக்க முடியாது.இருப்பினும் தங்கத் தட்டில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Exit mobile version