கோவையில் வெள்ளை நாகம்! ஆச்சர்யத்தில் மக்கள்!

0
150
White Dragon in Coimbatore

கோவையில் வெள்ளை நாகம்! ஆச்சர்யத்தில் மக்கள்!

கோவையில் மிகவும் அரிதான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டுள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது, கோவையை அடுத்த குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்து வந்துள்ளது.

இந்த வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவல் அறிந்து வந்த வனத்துறை ஆர்வலர்கள் வெள்ளை நிற நாகப்பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்,

வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த நாகப்பாம்பை “வெள்ளை நாகம்” என்று பலரும் கூறிய நிலையில் வனத்துறை ஆர்வலர்கள் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாகவே வெள்ளை நிறத்தில் நாகப்பாம்பு காட்சியளிப்பதாக கூறினார்.

மேலும் கூறுகையில் மரபணு பிரச்சனை தோல் நிறமி குறைபட்டால் காணப்படும் வெள்ளை நிற நாகப்பாம்புகளை காண்பது மிகவும் அரிது என்று தெரிவித்துள்ளார்.