முந்தைய காலத்தில் வயதானவர்கள் மட்டுமே நரைமுடி பிரச்சனையை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது இளம் தலைமுறையினரிடையே இந்த இளநரை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.
வெள்ளை முடியை மறைக்க டை பயன்படுத்தினால் முடி உதிர்தல்,தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே கெமிக்கல் ஹேர் டைக்கு மாற்று வெந்தய ஹேர் பேக் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
*விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
*பாதாம் எண்ணெய் / தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
*வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் வெந்தயத்தை வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.வெந்தய நிறம் கருப்பாகும் வரை வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
பிறகு இந்த வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெந்தயப் பொடியை கிண்ணத்தில் கொட்டி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இந்த வெந்தய பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.தலையில் நரைமுடி காணப்படும் இடத்தில் முடியின் மயிர்க்கால்களில் படும்படி தடவி ஊறவைக்க வேண்டும்.
பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த வெந்தய பேக்கை பயன்படுத்தி வந்தால் தலையில் உள்ள வெள்ளைமுடி மீண்டும் கருமையாகிவிடும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயில் வெந்தயத் தூள் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் வெள்ளைமுடி இயற்கையாக கருமையாகும்.வெள்ளைமுடி மட்டுமின்றி தலையில் உள்ள பொடுகுப் பிரச்சனைக்கும் வெந்தயம் பயன்படுத்தலாம்.