Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸை யார் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பீட்ரூட்டை பொரியல்,ஜூஸ் என்று எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.உடல் ஆரோக்கியம்,சரும ஆரோக்கியம் மேம்பட பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)வைட்டமின் ஏ,பி
2)நார்ச்சத்து
3)பொட்டாசியம்
4)காப்பர்
5)சோடியம்
6)சல்பர்
7)மாவுச்சத்து
8)தாமிரம்
9)மெக்னீசியம்

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்:

**சரும நிறத்தை மாற்ற,சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம்.

**செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

**கல்லீரலின் ஆரோக்கியம் மேம்பட பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற இந்த ஜூஸ் உதவுகிறது.

**இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம்.

**உடல் சூடு தணிய கண் எரிச்சல் குணமாக பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம்.தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

**உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைய பீட்ரூட் ஜூஸ் செய்து பருகலாம்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் உரிய பலன் கிடைக்கும்.

**பீட்ரூட்டில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.முதுகு வலி,மூட்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பீட்ரூட் சாறு பருகலாம்.

பீட்ரூட் ஜூஸ் தீமைகள்:

**இதில் இருக்கின்ற உலோக சேர்மங்கள் கணையத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும்.

**அதிகளவு பீட்ரூட் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.பீட்ரூட்டில் இருக்கின்ற ஆக்ஸலைட்டுகள் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகிறது.எனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் இதை தவிர்த்துவிடுவது நல்லது.

**ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

Exit mobile version