சேலம் மாவட்டம் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் மதுவாங்கும் குடிமகன்கள்,ரோட்டில் நின்றும், அதற்கு பக்கத்தில் உள்ள வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்தும் மதுகுடித்து வந்துள்ளனர். வழக்கமாக நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டு வாசலில் கூட்டமாக அமர்ந்து குடித்து வந்தனர்.
தொந்தரவாக நினைத்த வீட்டின் உரிமையாளர், அவர்களை அப்புறப்படுத்துமாறு அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் குடிமகன்களை அப்புறப்படுத்தினர்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் அங்கே கூடினர்.பின் மீண்டும் காவலர்கள் வந்து அவர்களை அடித்து விரட்ட முற்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்? என்று கேள்வி கேட்டு காவல் நிலையத்தில் படுத்துக்கொண்டு நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.