யாருக்கு அதிகாரம்? திருச்சி மாவட்ட திமுகவில் வெடித்தது சர்ச்சை!

0
129

ஆளுங்கட்சியான திமுக அதில் தற்சமயம் யாருக்கு அதிகாரம்? என்ற கேள்வி எழும் விதத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டு பகுதி செயலாளர்கள் 8 வட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.

கட்சியின் மேலிடம் ஒப்புதல் வழங்காமல் கட்சி பத்திரிகையில் வழக்கமான அறிவிப்பு இன்றி மிகப்பெரிய குடும்ப உறவு நெருக்கத்தை வைத்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு மாவட்ட அமைச்சர் ஒருவருடைய உதவியாளரின் தந்திரமே காரணமாம். அன்னையின் அந்த உதவியாளரின் பிறந்தநாள் விழா மிக முக்கிய நபர் பிறந்தநாள் விழாவை போன்று மிகவும் சிறப்பாக நடந்திருக்கிறது. திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் பங்கேற்று பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

புதிய நிர்வாகிகள் தன்னுடைய ஆதரவாளராக இருந்தால்தான் எதிர்வரும் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்பது அமைச்சர் உதவியாளரின் தொலை நோக்கு பார்வையாக இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக தான் கூழுடன் நிர்வாகிகள் மாற்றம் மாவட்ட அமைச்சர்கள் இருவரும் ஒற்றுமையாக இல்லாமல் இரண்டு துருவங்களாக செயல்படுவதால் கோஷ்டி பூசல் தீவிரமாகி விட்டது என தெரிவிக்கிறார்கள் திமுகவைச் சார்ந்த உடன்பிறப்புகள்.

பொதுப்பணித்துறையில் சென்னை திருச்சி மதுரை உள்ளிட்ட மூன்று மண்டலங்கள் மட்டுமே இருந்தனர் ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமை பொறியாளர் பதவி முக்கியமானது என்று சொல்லப்படுகிறது, தற்சமயம் திருச்சி மண்டலத்தை பிரித்து கோயமுத்தூர் மண்டலம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மண்டலத்தில் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், சேலம், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அரசின் கட்டுமானப் பணிகள் பராமரிப்பு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது ஆகவே கோயம்புத்தூர் மண்டல தலைமை பொறியாளர் பதவி லாபம் மிகுந்த பதவியாக இருக்கிறது. இந்த பதவியைப் பிடிப்பதற்காக துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரும் அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்டியுடன் நின்று கொண்டு இருக்கிறார்களாம். இந்த பதவிக்கு துறையின் முக்கிய புள்ளி யாரை எதன் அடிப்படையில், நியமிக்க இருக்கிறார்? என்பதே தற்சமயம் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.