Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்நீச்சல் தொடரில் அடுத்த ஆதி குணசேகரன் யார்!!? நடிகர் வேல ராமமூர்த்தி என்ன கூறினார் தெரியுமா!!?

#image_title

எதிர்நீச்சல் தொடரில் அடுத்த ஆதி குணசேகரன் யார்!!? நடிகர் வேல ராமமூர்த்தி என்ன கூறினார் தெரியுமா!!?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் பேசியுள்ளார். நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் என்ன கூறினார் என்று பார்க்கலாம்.

இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைகாட்சியில் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து அவர்கள் சிறப்பாக நடித்து வந்தார். மக்கள் மத்தியில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் மூலமாக நடிகர் மாரிமுத்து அவர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக நடிகர் மாரிமுத்து அவர்கள் உயிரிழந்தார். நடிகர் மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியிலும் சினிமா துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் மாரிமுத்து அவர்கள் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் அடுத்ததாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி அவர்கள் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவியது. அதற்கு நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

இது தொடர்பாக நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் “நடிகர் மாரிமுத்து அவர்கள் மறைந்த பின்னர் சேனல் தரப்பில் இருந்து என்னிடம் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க சொல்லி கேட்டார்கள். ஆனால் நான் தற்பொழுது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றேன். இப்பொழுதும் நான் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் இருக்கின்றேன்.

இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 20ம் தேதிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிகின்றது. எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் அதைக் குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை” என்று கூறினார்.

Exit mobile version