Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேமுதிக-வின் அடுத்த கூட்டணி யார்? திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது.இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்த் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் தமது கட்சி கூட்டணி அமைப்பது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வரும் நிலையில்,தேமுதிக, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி மூலம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக,செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் பேசி கருத்துகளைக் கேட்டு வருவதாகவும்,அதிமுக உடனான தற்போதைய கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் கலவையான கருத்து உள்ளது என்றும் கூறினார்.இதனால் தேர்தல் நெருங்கும்போது எந்த கட்சியை உடன் தேமுதிக கூட்டணி சேரும் என்பதனை கட்சித் தலைமை முடிவுசெய்து அறிவிக்கும். எனவே கூட்டணி எப்படி இருந்தாலும் தேமுதிக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் செல்வாக்கைப் பெற தொண்டர்கள், மாவட்டம் தோறும் மக்கள் பணியாற்ற வேண்டுமென்று மாவட்ட நிர்வாகிகளுக்கு பிரேமலதா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version