Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?

 

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்களாளும்,கட்சித் தொண்டர்களாளும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இவரின் பிறந்தநாளிருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், “கேப்டன் விஜயகாந்தை இனி கிங்காக பார்க்க தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.”இதைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டுமென்றும் கட்சி தொண்டர்கள் ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து விரைவில் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மேலும் அவர்,கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அதிமுக உடனான தற்போதைய கூட்டணி குறித்து நிர்வாகிகள் மத்தியில் கலவையான கருத்து உள்ளது என்றும்,இதனால் தேர்தல் நெருங்கும்போது எந்த
கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்பதனை கட்சித் தலைமை முடிவுசெய்து அறிவிக்கும். எனவே கூட்டணி எப்படி இருந்தாலும் தேமுதிக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் தொண்டர்கள், மக்கள் செல்வாக்கைப் பெற,மாவட்டம் தோறும் மக்கள் பணியாற்ற வேண்டுமென்று மாவட்ட நிர்வாகிகளுக்கு பிரேமலதா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி தேமுதிக கூட்டணியில் இருந்தபோது, அதிமுக மாநிலங்களவை பதவியில் தேமுதிகவிற்கு வாய்ப்புகள் வழங்கவில்லை என்று ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் இதுபோன்று பேசியிருப்பது,அதிமுகவின் இடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவேதான் தேமுதிகவை சமாதானப்படுத்தும் நோக்கில்,அதிமுக அமைச்சரான ஜெயக்குமார்,”கூட்டணியில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அது சரியாகி விடும் என்றும், எங்களை விட்டு யாரும் போக மாட்டார்கள்” என்றும் நம்பிக்கையுள்ளதென தெரிவித்துள்ளார்.

Exit mobile version