Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் சசிகலா  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில விஷயங்களை கேப்போம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்துக்காக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம்  எட்டிபாக்காத அளவுக்கு  கீழே தள்ளப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு என  அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியின் சட்ட விதிகளை மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை, யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை . எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவின் சட்ட திருத்தங்களில் திருத்தம் செய்வதற்கு எந்த தொண்டரும் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.அதிமுக கட்சி தொண்டர்கள் அனைவரும் இப்போது இரண்டாக உயைந்தார்கள்.அதிமுக ஆட்சியில் அடுத்த நிலை யார் என்று கேள்விக்குறியாக நிற்கிறது.

Exit mobile version