2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்!

0
101
#image_title

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்!

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார்.1996லிருந்து ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த ரஜினி கடந்த 2021 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போடும் விதமாக அறிவித்த சில நாட்களில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியான நிலைப்பாட்டில் வந்த பின்னரும் தேர்தல் வரும்பொழுது எல்லாம் ரஜினி யாருக்கு ஆதரவு தருவார்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத்தான் செய்கிறது.ஊடகங்களும் இது பற்றி கேள்வி எழுப்புவதை வழக்கமாக வைத்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு தருவார் என்பது குறித்து அவரது சொந்த அண்ணன் சத்தியநாராயண ராவ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் நேற்று திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு எந்தொரு கட்சிக்கும் இல்லை.அவர் எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை என்று உறுதியாக கூறினார்.