இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் மிக முக்கியமானதாக பார்க்கபடுவது வர்த்தகம் தான். இந்த நிலையில் உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசும் முன்னாள் அதிபர் டிரம்பும் மோதுகின்றனர்.
இதில் வெற்றி பெறுபவர் யார் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அந்த நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இவர்களில் யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை என மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிசும், டொனால்ட் டிரம்பும் பல்வேறு கொள்கைகளில் முரண்பட்டாலும் இந்தியாவுடனான வர்த்தகத்தை பொறுத்தவரை ஒரே கொள்கையே கொண்டுள்ளனர்.
ஆனால் வளரும் சக்தியை கொண்டுள்ள நாடு இந்தியா என்பதால் யார் வென்றாலும் அவருடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படும் என கூறப்படுகிறது. மேலும் கடந்த மாதம் பேட்டி ஒன்றில் டிரம்ப் இந்தியாவை துஷ்பிரயோகம் செய்யும் நாடு என அழைத்தார். இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிப்பதாக நீண்ட காலமாக குற்றம் சஷ்டி வரும் அவர் தான் மீண்டும் வெற்றி பெற்றால் பரஸ்பர விதி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தில், கமலா மற்றும் டிரம்ப், சீனாவுடன் மோதல் செயல்ப்பாட்டை தொடர்கின்றனர். அவர்களின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.