Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எத்தனை வகை டா சாமி! மீண்டும் உலக நாடுகளில் உலா வரும் புதிய வகை கொரோனா!

கொலம்பியாவில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கின்ற உருமாறிய மியு என்ற கொரோனாநோய்த்தொற்றை உலக சுகாதார அமைப்பு மிக தீவிரமாக கண்காணித்து வந்துகொண்டு இருக்கிறது.

2019 ஆம் வருடத்தின் கடைசியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கியது கொரோனா வைரஸ் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா டெல்டா, டெல்டாப்லஸ் என்று பல விதத்திலும் உருமாறி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இதில் டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தான் அதிக அளவில் பாதிப்பையும் உயிரிழப்பையும் உண்டாக்கி வருகின்றது. ஒரு சில நாடுகளில் நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதை போல சில மாதங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, இதற்கு முடிவே இல்லையா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், முதல்முறையாக கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்டு இருக்கின்ற பி1 621 என்ற உரு மாறிய கொரோனாவிற்கு மியு என்று ஆய்வாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். அதோடு உலக சுகாதார அமைப்பு இதனை கவனிக்கவேண்டிய நோய் தொற்று வகையாகவும் பட்டியலிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் உருமாற்றம் அடைந்த மியு வகை கொரோனா தடுப்பு ஊசி மூலமாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் வல்லமை உடையது, இதனை மேலும் புரிந்துகொள்ள அடுத்தடுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது என கூறியிருக்கிறது.

மியூ என்ற உருமாறிய நோய்த்தொற்று உட்பட ஒட்டு மொத்தமாக ஐந்து வகைகளை கண்காணிக்க வேண்டிய நோய்த்தொற்று வகையாக பட்டியலிட்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. முதலில் கொலம்பியா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வகையான வைரஸ் தொற்று தற்சமயம் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் மியு வகை நோய் தொற்றினால் 0.1 சதவீதம் பேரும் கொலம்பியாவில் 39 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சார் covid-19 வகை வைரஸ் அநேக உரு மாற்றம் அடைந்தாலும் அதில் பெரும்பாலும் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. இருந்தாலும் ஒருசில உருமாற்றங்கள் மட்டும் அதிவேகமாக பரவுதல், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துதல், தடுப்பூசியை எதிர்க்கும் சக்தியை மட்டு படுத்துதல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்த வைரஸ் தொடர்பாக தான் அடுத்தடுத்து ஆய்வுகள் மூலமாக இதன் தன்மை தொடர்பாக தெரியவரும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

Exit mobile version