Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

Who should link Aadhaar number with electricity connection? The information released by the power board!

யாரெல்லாம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்? மின்வாரியம் வெளியிட்ட தகவல்!

தமிழக மின்வாரியம் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர்.

அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்போர் ஒரே ஆதார் எண்ணை  சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர். தற்பொழுது ஒரே ஆதார் எண்ணை ஏன் அனைத்து இணைப்புகளும் தர வேண்டும் என்று மின் நுகர்வோர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் மின்வாரியம் கூறியுள்ளதாவது, 100 யூனிட் இலவசம் மானிய மின்சாரம் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதனை சீர்படுத்தவே இவ்வாறு பல இணைப்புகள் கொண்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளானர். மேலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் ஆதார் எண்ணை  கூட மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினர்.

Exit mobile version