Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்! இன்று நடைபெறும் தேர்தல் பரபரப்பில் டெல்லி!

நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தற்போது காலம் தரப்பாக இருக்கக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீஷ் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் மார்க்கரேட் ஆல்வாவும் களத்தில் இருக்கிறார்கள்.

குடியரசு தலைவர் தேர்தல் நடந்ததை போல அல்லாமல் இன்று தேர்தலில் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக நாடாளுமன்றத்தில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக 788 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு ஒன்று தான் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடைபெறும் வாக்கை வெளியே காண்பிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சிகள் கொரடா உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தற்சமயம் குடியரசு துணைத் தலைவராக இருக்கின்ற வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகின்ற 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் தான் மாநிலங்களவை தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் ஜெகதீஷ் தங்கர் 515 வாக்குகளுக்கு மேல் பெற்று எளிதாக வெற்றி பெறுவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

23 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மம்தா பானர்ஜி இந்த முடிவு எதிர்க்கட்சிகள் அணியில் ஏற்பட்ட விரிசலாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக குடியரசு தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜி அவர் கட்சியின் சார்பாக ஆளும் கட்சி குடியரசு தலைவர் வேட்பாளரான் திரவுபதி முர்முவை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறும். அதன் பிறகு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்0 நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவர் யார் என்பது இன்று மாலை அனைவருக்கும் தெரிந்துவிடும்.

Exit mobile version