Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்! முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

அதிமுகவில் சாதி மதம் பார்க்க மாட்டோம் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் அந்த அடிப்படையில்தான் இந்த புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டசபை உறுப்பினருமான செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

திமுகவின் செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த கட்சியின் அவைத் தலைவராக இருந்து வந்த மதுசூதனன் மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அதனை அடுத்து நடந்த கூட்டத்தில் கட்சியின் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது, அதனடிப்படையில் இதுவரையில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த விதியில் தற்சமயம் புதிய திருத்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது, அதன்படி இனி கட்சி உறுப்பினர்களால் தலைமை தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டாகியிருக்கிறது, இதற்கிடையே கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்து கொண்டு அன்வர்ராஜா மீண்டும், மீண்டும், தவறு செய்து இருக்கின்றார். ஒரு மூத்த நிர்வாகி கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. கழகம் ஒற்றுமையுடன் வலுவுடன் இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருக்கின்ற சூழ்நிலையில், கழகத்தின் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் அவருடைய பேச்சு இருக்கிறது. இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் ஆகவே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர் ராஜா மீது கட்சியின் தலைமை நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு இந்த நிலைதான் ஏற்படும் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுகவில் ஜாதி இல்லை, மதம் இல்லை, அதிமுக என்றும் சாதி மதம் உள்ளிட்டவற்றை சாராத கட்சி சாதி மதம் பார்த்து இருந்தால் அதிமுக என்ற கட்சி இருந்திருக்காது முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ,ஜெயலலிதா என்ன சாதி, என்ன மதம் என பார்க்காமல் தான் 50 வருடங்கள் கழகம் செயல்பட்டு வந்தது. தமிழ் நாட்டிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக அப்படிப்பட்ட கட்சியில் சாதியாவது, மதமாவது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்று செயற்குழுவில் கூட சிறுபான்மை இனத்தை சார்ந்த தமிழ்மகன் உசேன் தேர்வு தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். எம்ஜிஆரின் தீவிர விசுவாசி தமிழ்மகன் உசேன் என கூறியிருக்கிறார்.

அதிமுக பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் பார்க்காது வாரிசு அரசியல் இல்லாத கட்சி, அதிமுக அடுத்து யார் வேண்டுமானாலும் தலைமை இடத்திற்கு வரலாம் என்ற அடிப்படை கொள்கை உடைய கட்சி என்றால் அது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார்.

Exit mobile version