சோர்ந்து போன திமுக சுறுசுறுப்பான அதிமுக! காரணம் என்ன தெரியுமா?

0
240

அதிமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது இந்த நிலையில், அந்தக் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அதிமுகவின் தலைமை.அதில் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட இருக்கின்றார், அதேபோல தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார், அதேபோல அமைச்சர் ஜெயக்குமார் அவர் தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய ராயபுரம் தொகுதியிலேயே போட்டியிட இருக்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயக்குமார் எங்கள் கட்சியின் சார்பாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் இறுதி செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில், எங்களுடைய கூட்டணிக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வண்ணம் தான் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல எங்களுடைய கூட்டணி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் 100% வெற்றியை பதிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அனைத்து பகுதிகளுமே எங்களுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதேபோல புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இரும்புக்கோட்டை தான் உரிய சமயத்தில் வேட்புமனுதாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல இதுவரையில் ராயபுரம் தொகுதியில் ஆறுமுறை போட்டியிடுகின்ற ஜெயக்குமார் அதில் 5 முறை வெற்றி பெற்று இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு கட்சித் தலைமையின் ஒப்புதலோடு 7வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோல தமிழகத்திலே எங்களுடைய கட்சி பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சீரிய தலைமையும் அவருடைய விறுவிறுப்பான செயல்பாடும் மக்களை கவர்ந்து இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கின்றார். ஆகவே எங்களுடைய வெற்றி வாய்ப்பு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பிரகாசமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பதை இதுவரையில் முடிவுறாமல் இழுபறியில் இருந்து வரும் நிலையில், அதிமுக சார்பாக முதல் வேட்பாளர் பட்டியலில் வெளியிடப்பட்டு இருக்கின்றது. இதனால் திமுக சற்றே கலக்கம் அடைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இன்றிலிருந்து சரியாக 30 நாட்கள் மட்டுமே தேர்தல் வருவதற்கு இருக்கிறது என்பது அரசியல் கட்சிகளுக்கு அவர் கொடுக்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் அதிமுக பரபரப்பாக செயல்பட்டாலும் கூட ஒவ்வொரு விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அதற்கு முன்பாக வேட்பாளர்பட்டியல், வேட்புமனுத்தாக்கல் மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றை முடித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதே அனைத்து அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருந்து வருகிறது அதற்கேற்றார் போலவே அதிமுகவும் செயல்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் திமுக கூட்டணியில் இதுவரையில் அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடியாமல் இருக்கிறது. அப்படிப் பார்த்தோமானால் அதிமுகவிற்கு முன்பாகவே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை திமுக ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் இதுவரையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.ஏனென்றால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி கூட்டணியில் பிரச்சனை போன்ற எண்ணற்ற பிரச்சனைகளில் திமுக சிக்கித்தவிக்கிறது என்று சொல்லப்படுகிறது ஆகவேதான் ஆரம்பத்தில் மிக ஜரூராக தொடங்கிய தேர்தல் வேலைகளை தற்சமயம் தொடர முடியவில்லை என்று தெரிவிக்கிறார்கள் திமுக அபிமானிகள்.

திமுகவின் இந்த மந்தமான செயல்பாடு அதிமுகவிற்கு ஒரு பிளஸ்பாய்ண்டாகவே மாறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக சோர்ந்து போயிருக்கும் இந்த சமயத்தில் அதிமுக அதனுடைய தேர்தல் வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாக செய்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.