Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது ஏன்?? பிரபல பாகுபலி  நடிகை ஓபன் டாக்!! 

Why acted in such scenes?? Famous Baahubali  Actress Open Talk!!

Why acted in such scenes?? Famous Baahubali  Actress Open Talk!!

அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது ஏன்?? பிரபல பாகுபலி  நடிகை ஓபன் டாக்!! 

ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ் ஒன்றில் ஆபாசமாக நடித்தது குறித்து பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பின்னர் சூர்யாவுடன் நடித்த அயன் படம் கை கொடுக்கவே, அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அவ்வாறாக தமிழில் கார்த்தி உடன் பையா சிறுத்தை, தனுசுடன் படிக்காதவன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதேபோல் பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்த இவரின் நடிப்பு பேசப்பட்டது.

தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ரஜினியுடன் இணைந்து ஜெய்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், 15 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்த அவரால் அவருக்கு பின்னாடி வந்த கீர்த்தி சுரேஷ், சமந்தா இடத்தினை பிடிக்க முடியவில்லை. இவர் தற்போது வரை ஒரு படத்துக்கு 4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தமன்னா நடித்த நெட்பிளீக்ஸில் வெளியாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் -2 என்ற வெப் சீரிஸ் டீசர் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் தமன்னா நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததால் அவர் பிரபலமாகி உள்ளார்.

மேலும் ஜீ  கர்தா  என்ற தொடரிலும் சுஹைல் நைய்யாருடன் இணைந்து மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். அதைப்பற்றி தமன்னா கூறுகையில், அந்தத் தொடரில் பள்ளிப் பருவத்து காதலை பற்றி கூறியிருப்பதால் சில இடங்களில் நெருக்கமான காட்சிகள் தேவைப்பட்டதாக கூறினார்.

மேலும் கூட நடிக்கும் இணைகளுடனான இருக்கும் உறவு முறைகளுக்கு இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே தான் அந்த காட்சிகளில் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version