Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஜித்-விஜய் எதற்கு? தனுஷ் தான் இதற்கு சரி! ப்ரேமம் இயக்குனர் பேட்டி!

ப்ரேமம் படத்தை தமிழில் இயக்கினால் அதற்கு கதாநாயகனாக அஜித்-விஜய் இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குனர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

மலையாளத்தில் மூன்று கட்ட வயதுப் பருவத்தில் வரும் காதல் கதைகளை மிகவும் சுவாரசியமாக மலையாள மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி மக்களுக்கும் பிடித்தவாறு அமைந்த படம் பிரேமம். இந்தப் படத்தை பிடிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

இந்த படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தமிழில் நேரம் படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உள்ளிட்ட அனைவரும் தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகர் நடிகைகள் திகழ்ந்து வருகின்றனர்.

இந்த படம் பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அதுவும் அபார வெற்றி பெற்றது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள் ஃபேஷன் ஆகவே இது போன்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றியடையச் செய்த இயக்குனர்களை அழைத்து பேட்டி எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்று அல்போன்ஸ் புத்திரனை அழைத்து பேட்டி எடுத்தது. அதில் பிரேமம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால், அதற்கு கதாநாயகனாக விஜய் அல்லது அஜித் இவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார் என்று கேட்டதற்கு ஆத்திரம் கொண்ட அவர், எதற்கெடுத்தாலும் ஏன் விஜய், அஜித் என்று கூறுகிறீர்கள் கதைக்கு யார் சரியாக இருப்பார்கள் என்பது இயக்குனர்களுக்கு தெரியும்.

கதைக்கு ஏற்றார்போல் கதாநாயகர்களை தேர்வு செய்வோம் என்று காட்டமாக பதில் அளித்தார். அதன்பின் தொடர்ந்து பேசிய அவர், அப்படி தமிழில் பிரேமம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் கதாநாயகனாக தனுஷ் தான் நடிப்பார் என்று அவர் தெரிவிக்க, முன்னணி நடிகர்களான விஜய் அஜித்தை புறம்தள்ளிவிட்டு இவ்வாறு இயக்குனர் கூறியது தனுஷ் ரசிகர்களை மார்தட்டி பெருமைப்பட வைத்துள்ளது. 

Exit mobile version