தமிழகத்திற்கு ஏன் காவிரி தண்ணீர்?  எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள்!!

0
77

 

தமிழகத்திற்கு ஏன் காவிரி தண்ணீர்?  எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள்!!

 

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதற்கு கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

காவிரியில் இருந்து தமிழருக்கு தேவையான நீர் நீரை திறந்து விட வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

 

கடந்த ஜீன் 12-ல் காவிரி அணியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் இது போதுமான அளவுக்கு அந்த தண்ணீர் இல்லை என டெல்டா பகுதி விவசாயிகள் கட்டும் கூட்டம் சாட்டினர் காவிரி நீரை நம்பி நெல் குறுவை சாகுபடி செய்து விவசாயிகள் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகி கடும் அவதிக்கு உள்ளாகினர்.

 

இதையெடுத்து, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

 

இதையடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு கடந்த சில நாட்களாக தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

அவரைத் தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள்  முதல்வருமான குமாரசாமி அவர்களும் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா என்ற கூட்டணியில், காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இடம்பெற்றுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சி திமுகவை திருப்தி படுத்துவதற்காக தான், காவேரி அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இவ்வாறு குமாரசாமி மற்றும் பசவராஜ் பொம்மை ஆகிய இரு கர்நாடக முன்னாள் முதல்வர்களும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.