Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்ப அதிர்ச்சி தருவதாக வருங்கால கணவருக்கு போன் செய்த மணமகள்! மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தற்போதுள்ள காலகட்டத்தில் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருமணம் என்று வந்துவிட்டாலே அவர்களின் விருப்பம் முக்கியம் பெற்றதாக இருந்து வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் திருமணம் மட்டுமல்லாமல் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரின் சொல்படி நடந்தார்கள்.

ஏனெனில் அப்போது கல்வியறிவு சரியாக குழந்தைகளிடையே காணப்படவில்லை. பெற்றோர் சொல் மிக்க மந்திரமில்லை என்று தான் அந்த கால கட்டங்களில் குழந்தைகள் வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் தற்போது அப்படியல்ல தற்சமயம் கல்வியறிவு மேம்பட்டு விட்டது ஆகவே குழந்தைகள் அனைவரும் நன்றாக படித்து விவரம் தெரிந்து கொண்டார்கள்.

அதாவது, தனக்கு எது நல்லது, எது கெட்டது, தான் எதை தேர்ந்தெடுத்தால் நாம் நன்றாக இருப்போம் என்று யோசித்து மிகச் சரியான முடிவை தன் வாழ்வில் தானே எடுக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது இளைய சமுதாயம்.

ஆனால் இதனை அறியாத பெற்றோர் இன்னமும் தங்களுடைய வாரிசுகள் அனைவரும் தங்களுடைய பேச்சை தான் கேட்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது பல சமயங்களில் விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் குலமங்கலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமநாயுடு என்பவர் இவர் ஐதராபாத்திலிருக்கின்ற சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அவருக்கும், ராதிக மாட்டம் கிராமத்தைச் சார்ந்த புஷ்பா என்பவருக்கும், திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது திருமணம் மே மாதம் 20ஆம் தேதி நடைபெறுவதாக நிச்சயதார்த்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று புஷ்பா அவருடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவருடைய பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக கட்டாய திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்கள்.

இந்த நிலையில், மணமகள் புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்கள். இதனை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மணமகள் புஷ்ப மணமகனுக்கு போன் செய்து பரிசு கொடுப்பதாக வீட்டிற்கு வரவழைத்தார்.

அவர் வந்தவுடன் அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று தெரிவித்து கேக் வாங்கிக்கொண்டு புஷ்பா தன்னுடைய வீட்டிற்கு மணமகனை அழைத்து சென்றார்.

கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டதாகவும், சொல்லப்படுகிறது. அதன்பிறகு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க இருப்பதால் கண்ணை கட்டிக் கொள்ள வேண்டும் என்று மணமகனிடம் புஷ்பா கூறியிருந்தார் என சொல்லப்படுகிறது.

ஆகவே இதற்கு மணமகன் சம்மதம் கூறியதால் தன்னுடைய துப்பட்டாவை எடுத்து மணமகனின் கண்ணை கட்டி விட்டார் புஷ்பா அதன் பிறகு திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகனின் கழுத்தை சரமாரியாக அடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மணமகனின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து மணமகனை அனகாபள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். புஷ்பா. மணமகன் தடுக்கி கத்தியின் மீது விழுந்ததால் காயம் உண்டானதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு தப்பிச் சென்று விட்டார் புஷ்பா.

இதனைக் கேட்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவை கைது செய்தார்கள். விசாரணையில் பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ்வதற்கு தான் புஷ்பா திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் பெற்றோர் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தால், அவரிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க இயலாத சூழ்நிலையில், புஷ்பா தன்னுடைய வருங்கால கணவரை கொலை செய்து விட்டால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்து இவ்வாறு செய்ததாக விசாரணையில் கூறியிருக்கிறார்.

Exit mobile version