கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் பல ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கட்டங்கள் வாரியான மக்கள் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு தற்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பதஞ்சலி என்ற தனியார் நிறுவனர் பாபா ராம்தேவ், தாங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாகவும், பொதுமக்கள் அதனை வாங்கி உட்கொள்ளுமாறு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
“கொரோனில்(CORONIL)” என்ற பெயருடைய அந்த மருந்தினை பரிசோதனைகள் இன்றி உட்கொள்வது தவறு எனவும், இந்தத் தொற்று நோய் பற்றிய மக்கள் அச்சத்தினை பயன்படுத்தி மருந்து விற்று லாபம் ஈட்டுவதாக கூறி அதனைத் தடை விதித்திருந்தது.
இந்தத் தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனம், திவ்யா யோக் மந்திர் என்ற நிறுவனமும் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது, அந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன்,
ஏற்கனவே செய்யப்பட்ட தடை உத்தரவே மீண்டும் தொடரும் எனவும், “கொரோனில் 92 பி” என்ற மருந்தை ஏற்கனவே 1993 ஆம் ஆண்டு பதஞ்சலி நிறுவனம் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 27 வருடங்கள் கழித்து கொரோனா அச்சத்தினை பயன்படுத்தி, எதிர்ப்பு சக்தியினை கூட்டும் என வியாபாரத்தில் சந்தை யுத்தியை பயன்படுத்தியுள்ளது. மேலும், மக்களின் அச்சத்தினைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்ததற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சி.வி கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் ‘கொரோனில் என்ற மருந்தானது எதிர்ப்பு சக்தியினை கூட்டுவது தானே தவிர, தடுப்புமருந்து அல்ல’ என்றும் அவர் கூறி தீர்ப்பளித்தார்.