இதயம் சமந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்ய முடியும்.பெரும்பாலான இதய நோய்களுக்கு அறுவை சிகிச்சையே முதன்மை தீர்வாக இருக்கின்றது.அப்படி இருக்கையில் சமீப காலமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மரணிப்பது அதிர்வை ஏற்படுத்து விஷயமாக உள்ளது.
நமது உடலில் மற்ற உறுப்புகளில் செய்யப்படும் சிகிச்சை போன்று இதய அறுவை சிகிச்சையை எளிதில் செய்துவிட முடியாது.இதய அறுவை சிகிச்சையில் குறைபாடு இருந்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும்.சிகிச்சை செய்த பின்னரும் சரியாகாமல் இருந்தால் அதன் பாதிப்பு தீவிரமாகும்.
அறுவை சிகிச்சை செய்த தையல் தளர்தல்,அறுவை சிகிச்சை செய்த பின்னரும் இரத்தக் கசிவு ஏற்படுதல்,பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒட்டுத்திசு இயங்காமல் போதல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை தோல்வியுற்று மரணங்கள் ஏற்படுகிறது.
பக்கவாதம்,வலிப்பு,நரம்பு சார்ந்த பிரச்சனைகள்,அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி,இரத்தப்போக்கு உண்டதால் போன்ற காரணங்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதய வால்வு அறுவை சிகிச்சை பெற்றவர்கள் காலப்போக்கில் சிதைந்து மீண்டும் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை வரும்.
உங்களுக்கு இதய சர்ஜரி செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதேபோல் இதய அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பிந்தைய கால உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை தகுந்தார் போல் பின்பற்ற வேண்டும்.இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உங்கள் உடல் நலத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றால் நீங்கள் தயங்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
அறுவை சிகிச்சை பின்னர் மருத்துவர் சொல்லும் விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.மருத்துவர் கொடுக்கும் மருந்து,மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலுக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும்.குறைந்தது 6 மாதங்கள் வரை கடினமான வேலைகளில் ஈடுபடக் கூடாது.