இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

0
230
#image_title

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருமுறையாவது இடி இடிக்கும் பொழுது பயத்தில் “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்று சொல்லி இருப்போம். இவ்வாறு சொல்வதால் இடி நன்மை தாக்காது என்ற ஒரு தையரத்தை பெரியவர்கள் நமக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால் அர்ஜுனா என்று சொல்ல ஆன்மீகத்தில் ஒரு காரணமும் அறிவியல் படி ஒரு காரணமும் இருக்கிறது.

அறிவியல் காரணம்:-

பயங்கரமாக இடி இடிக்கும் போது ஒரு சிலரது காதுகளில் திடீர் அடைப்பு ஏற்பட்டு ஒருவிதமான சப்தம் கேட்கும். இவ்வாறு ஏற்படாமல் இருக்க தான் அர்ஜுனா என்ற வார்த்தையை உச்சரிக்கிறோம்.

அதாவது, அர்ஜுனா என்ற வார்த்தையில் உள்ள முதல் எழுத்தான “அர்” என்று கூறுவதால் நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். “ஜு” என்று கூறுவதால் வாய் குறுகி காற்று வெளியேறத் தொடங்கும். அடுத்து “னா” என்று கூறுவதால் முழுமையாக வாய் திறக்கப்பட்டு உள்ளிருக்கும் காற்று உடனடியாக வெளியேறும். இவ்வாறு காற்று வெளியேறுவதால் காது அடைக்காது என்பது அறிவியல் காரணம் ஆகும்.

ஆன்மீகக் காரணம்:-

மகாபாரதத்தில்

மகாபாரதத்தில் கண்ணனின் தோழனாக இருப்பவர் அர்ஜுனன். இவர் பாண்டவர்களில் ஒருவர் ஆவர். காலையில் எழுந்து அர்ஜுனனை நினைத்தால் எதிரிகள் மறைந்து விடுவார்கள் என்று புராணம் சொல்கிறது.

உண்மையான வீரன், அழகன், இரக்கம் கொண்டவன், கடவுளின் பக்தன் நற்குணங்கின் மொத்த உருவம் அர்ஜுனன் ஆவார்.

யமுனை கரையில் இருந்த காண்டவ வனத்தில் சுவேதசி மன்னருக்காக துர்வாச மகரிஷி தொடர்ந்து பல வருடங்களாக தீ வளர்த்து யாகம் செய்து வந்தார். அந்த யாகத்தில் அவர் இட்ட நெய் மற்றும் ஹவிஸையும் உண்டதால் அக்னி பகவானின் வயிறு மந்தமாகி இயல்பான செயல்களை செய்யாமல் போனது.

காண்டவ வனத்தை எரித்தால் தான் அக்னி பகவானால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியும் என்பதினால் அவர் அதை எரிக்க முற்பட்டார். ஆனால் வருண பகவான் மழை பொழிந்து அக்னி பகவானின் நாக்குகளை அணைத்து விடுகிறார் என்பதினால் அவர் கிருஷ்ண பகவான் மற்றும் அர்ஜுனனின் உதவியை நாடினார்.

அக்னி பகவான் இல்லையென்றால் உலகம் அழிவை நோக்கி சென்று விடும் என்பதினால் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அக்னி பகவானுக்கு உதவ முன் வந்தனர்.

அக்னி பகவான் வருண பகவானிடம் இருந்து தப்பித்து காண்டவ வனத்தை எரிக்க அம்புகள் குறையாத அம்புறாத் துணியையும், காண்டீபம் எனும் வில்லையும் அருஜுனருக்கு கொடுத்தார்.

காண்டீபத்தை பயன்படுத்தி வருண பகவான் உள் நுழையத்தபடி அம்புகளாலையே பந்தலிட்டு காண்டவ வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினார் அர்ஜுனன்.

அக்னி பகவான் காண்டவ வனத்தை எரிக்கப்போவதற்கு முன்னர் அந்த வனத்தில் இருந்த ரிஷிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். பின்னர் 21 நாட்கள் காண்டவ வனத்தை எரித்து தீர்த்தார் அக்னி பகவான்.

பிறகு கிருஷ்ணர் மற்றும் ரிஷிகளை அழைத்து மீண்டும் காண்டவ வானத்தை புதுப்பிக்கும் சக்தியை அவர்களுக்கு அக்னி பகவான் வழங்கினார். இதனால் தான் இந்த மே மாதத்தில் வரும் அந்த 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் என்று இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருணன் மழையை உள் நுழையாமல் அக்னிக்கு உதவியது அர்ஜுனர் அல்லவா. அதனால் தான் மழை சீற்றங்கள், மழை பெய்யும் பொழுது உண்டாகும் இடி, மின்னலின் போது அர்ஜுனா என்று உச்சரித்தால் அவர் நம்மை காப்பார் என்ற நம்பிக்கை நம் வழக்கத்தில் இருக்கிறது.