மனிதர்களின் ஆசனவாயில் இருந்து எதனால் வாயு(குசு) வெளியேறுகிறது? அவை ஏன் நாற்றமடிக்கிறது என்று தெரியுமா?
உங்களில் பலர் காற்று பிரிதல்(குசு) பிரச்சனைக்கு ஆளாகி கொண்டிருப்பீர்கள்.இவை மனிதர்களுக்கு மனப்பிரச்னையாக உள்ளது.சிலருக்கு சில நேரங்களில் இந்த வாயு பிரச்சனையால் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடும்.
இவ்வாறான பிரச்சனைக்கு நாம் பின்பற்றக் கூடிய உணவுப்பழக்க வழக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்த வாயுக்கள் நம் உடலில் ஏன் வெளியேறுகிறது என்று யோசித்துளீர்களா?
ஆசனவாயில் இருந்து எதனால் வாயு(குசு) வெளியேறுகிறது?
நீங்கள் அவசர அவசரமாக உணவு சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தால் உங்கள் வாயில் உணவுடன் சேர்த்து அதிகளவு காற்று உட்புகும்.இதனால் அவை ஏப்பம் மற்றும் வாயு(குசு) வெளியேறுகிறது.
நாம் உண்ணும் உணவு செரிமானமாகும் பொழுது அதில் இருந்து வாயு பிரிந்து குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.கரியமில வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துவது,சிறு குடலில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது,நீரிழிவு நோய்,கல்லீரல் நோய்,சிறுகுடலில் ஏற்படும் தொற்று உள்ளிட்ட காரணங்களால் மலக்குடலில் நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறுகிறது.
ஆசனவாயில் இருந்து வெளியேறும் காற்று நாற்றமடிக்க காரணம்?
மனித உடலில் மலக் கழிவுகள் அதிகம் தேங்கி இருந்தால் நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறும்.
மலச்சிக்கல்,மசாலா உணவுகள் உட்கொள்ளுதல்,புரதம் நிறைந்த உணவுகள்,வயிறு உப்பசம் போன்ற காரணங்களால் நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறுகிறது.மலக்குடலில் மைக்ரோஃப்ளோரா பாக்டீரியாக்கள் இருந்தாலும் துர்நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறும்.
மலக் குடலில் இருந்து வெளியேறும் வாயுக்களின் வாசனை நாம் பின்பற்றக் கூடிய உணவுக பழக்கத்தை பொறுத்து வெளியேறுகிறது.மசாலா உணவு,எண்ணெய் உணவு,அசைவ உணவு,முட்டை,வாயுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் நாற்றத்துடன் கூடிய குசு வெளியேறும்.