Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

கெஜ்ரிவால் மீது பிரதமருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..?? சிறையில் கொடுமைப்படுத்தப்படும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். அந்த கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அதுகுறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஆம் ஆத்மியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 

குறிப்பாக டெல்லியின் முதல்வர் என்றும் பாராமல் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தவாறே அனுப்பியுள்ள மெசேஜ் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி அவர் அனுப்பியுள்ள மெசேஜில் கூறியிருப்பதாவது, “என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். நான் பயங்கரவாதி அல்ல. நீங்கள் இப்படி நடந்துகொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மனைவி போன்ற குடும்ப உறுப்பினர்களை சந்திக்க கூட அனுமதி இல்லை. கண்ணாடி ஜன்னல் வழியாகவே சந்திக்க சொல்கிறார்கள்” என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், “அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் மக்களுக்காகவே உழைத்து வருகிறார். ஆனால் பிரதமருக்கு எதற்காக கெஜ்ரிவால் மீது இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை. கெஜ்ரிவாலை இவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள். ஒரு முதல்வரிடம் இப்படி நடந்து கொள்கிறீர்களா? 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கிறார்கள். 

அவரை எந்த வழியில் கொடுமைப்படுத்தலாம் என்று மட்டுமே பார்க்கிறார்கள். இருப்பினும் இவற்றை எல்லாம் கண்டு அஞ்சுபவர் கிடையாது கெஜ்ரிவால். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக ஐஆர்எஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட கெஜ்ரிவாலை காலி செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறியாமை” என கூறியுள்ளார். 

Exit mobile version