Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பா அந்த செருப்பை எடுத்துட்டு வா! பொது மேடையில் திமுக பொருளாளரால் உண்டான சர்ச்சை!

திமுகவின் பொதுக்குழு கூட்ட மேடையில் தற்போதைய திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு அவர்களின் காலணியை தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது அதில் புதிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை அறிவித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படத்திற்கு மலருதுவை மரியாதை செய்தனர். அதற்கு முன்னர் தங்களுடைய காலில் இருந்த செருப்பை கழட்டி விட்டனர். மரியாதை செலுத்திய பிறகு செருப்பை அணிந்து கொண்டு மேடையில் வந்து அமர்ந்தனர்.

ஆனாலும் பொருளாளர் டி ஆர் பாலு தன்னுடைய செருப்பை அணிய மறந்து இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார். அப்போது தன்னுடைய செருப்பை எடுத்து வருமாறு தொண்டர் ஒருவரிடம் அவர் தெரிவிக்க, அந்தத் தொண்டரும் தன்னுடைய கையில் செருப்பு எடுத்து வந்து டி ஆர் பாலு கால் அருகே வைத்தார். இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது இதனை கவனித்த வலைதளவாசிகள் இதுதான் திமுகவின் சமூக நீதியா? திராவிட மாடலா? என்று பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Exit mobile version