விநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

0
141

ஒரு நாள் பார்வதி தேவி கங்கையில் நீராடியபோது தான் அழுக்கை திரட்டி பொம்மையாக்க அது யானை தலையும் மனித உருவமும் கொண்டமைந்தது.

அதனை பார்வதி தேவி கங்கையில் போட பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிபட்டார், அப்போது பார்வதி தேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வால்தான் பார்வதிதேவி, கங்கை, உள்ளிட்ட இருவருமே விநாயகருக்கு தாயார் ஆனார்கள்.

இதனாலேயே சதுர்த்தி முடிவடைந்ததும் விநாயகரை கங்கையில் கதைக்கும் வழக்கம் உண்டானதாக சொல்லப்படுகிறது.

விநாயகர் சிலையை தண்ணீரில் கரைக்கும் வழக்கம் வந்தது தொடர்பாக மற்றொரு தகவலை இங்கே பார்ப்போம்.

ஆடிப்பெருக்கு விழாவில் வெள்ளம் உண்டாகும். அப்போது ஆற்றில் இருக்கின்ற மணலை வெள்ளப்பெருக்கு அடித்துச் சென்று விடும் இதன் காரணமாக, அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்கிறார்கள்.

ஆகவே மணல் அடித்து செல்லாமல் இருப்பதற்கு களிமண்ணை கரைத்தால் அது கரைந்து ஆற்று நீரை வெளியேறவிடாமலும் நிலத்தடி நீர்மத்தை அதிகரித்தும் கொடுக்கும் என்று முன்னோர்கள் கணித்ததாக சொல்கிறார்கள்.

அதனால்தான் விநாயகர் சிலையை வைத்து அவனை கரைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது ஈரமான களிமண்ணை கரைத்தால் பலன் கிடைக்காது. ஆகவே தான் அதனை மூன்று நாட்கள் வைத்து அது இறுகிப்போன பிறகு அதை கொண்டு சென்று ஆறுகளில் கரைத்திருக்கிறார்கள்.