Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம்.அதனால் அவரை கவுண்டர்மணி என சக நடிகர்கள் அழைத்தனர்.

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர்.இன்றும் கூட அவர் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னுடைய கவுண்டர் வசனங்கள் மூலம் திரையுலகை ஆட்டிப் படைத்தார்.

இப்படி பிரபலமாக இருந்த கவுண்டமணி பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.ஆனால் டி ராஜேந்தர் இயக்கத்தில் மட்டும் அவர் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்தது கிடையாது. இதற்கு ஒரு வலுவான காரணமும் சொல்லப்படுகிறது.

திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.பின்னர் சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற ஒரு திரைப்பட விநியோகஸ்தர் நிறுவனத்தை அமைத்து இயக்கிவருகிறார். இந்நிறுவனமானது 2011-ம் ஆண்டு தொடங்கி சென்னை மற்றும் மதுரை சார்ந்த திரையரங்குகளுக்கு விநியோகம் செய்கிறது.

அவர் அனைவரிடமும் ஒரு வித மரியாதையுடன் தான் பேசுவார்.ஆனால், கவுண்டமணி சாதாரணமாக படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் நக்கல், நையாண்டி செய்து கொண்டு இருப்பார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் கவலைப்படாமல் அவர்களை கிண்டல் செய்வார். அதனால் தான் அவரை பலரும் நக்கல் மன்னன் என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் டி ராஜேந்தர் நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளை படமாக்குவாராம். அந்த சமயத்தில் அந்தக் காட்சிகளை ஷுட் செய்வதற்காக சம்மந்தப்பட்டவர்களை உடனே ஸ்பாட்டுக்கு வர சொல்லி விடுவாராம். பிஸியாக இருக்கும் நடிகர்களிடம் இது சாத்தியமாகாது.

அதன் காரணமாகவும் இவர்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை…

Exit mobile version