தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக தெரியவில்லை!

0
119
Why is the Tamil Nadu government ignoring farmers? Doesn’t seem like a struggle for us!

தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக  தெரியவில்லை!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து வரும் தண்ணீரும் பல போராட்டங்களை கடந்து தான் வருகிறது.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக இருக்கும்.இதனால் முதல்வர் தொடர்ந்து மத்திய அரசிடம் அணை கட்டுவதை தடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

முதல்வர் அரியணை ஏறிய பிறகு,முதன்முறையாக பிரதமரை சந்தித்து வைத்த கோரிக்கையும் இதுதான்.அதேபோல தமிழக ஆளுநர் மத்திய அரசை காணச் சென்ற போதும் வைத்த கோரிக்கை மேகதாது அணை கட்டுவதை தடுப்பது பற்றிதான். ஆனால் கர்நாடக அரசும் இந்த எதிர்ப்புகளையும் மீறி அணை கட்டியே தீருவேன் என்று கூறி வருகிறது.இது அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் வேளையில் டெல்டா விவசாயிகள்கூறியதாவது,தமிழக முதல்வர் நாம் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் யாரென்று காட்டவேண்டும் என கூறுகிறார்.

ஆனால் ஒருபோதும் எங்களை அழைப்பது இல்லை புறக்கணித்து விடுகிறார்.கர்நாடக அரசு மத்திய அரசிடம் அணை கட்டுவதற்கு கோரிக்கை வைக்கும் போதெல்லாம் அவர்களின் விவசாயிகளை கூட்டி செல்கின்றனர்.ஆனால் தமிழக அரசு அவ்வாறு செய்வதில்லை.ஏன் தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது?அதுமட்டுமின்றி விவசாயிகளுக்காக போராடுகிறேன் என்று கூறும் முதல்வரை இவ்வாறு விவசாயிகளை புறக்கணிப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும்.

இந்த காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை உள்ளது காவேரி என்பது வாழ்வுரிமை என இவ்வாறெல்லாம் முதல்வர் கூறுகிறார்.ஆனால் தமிழக விவசாயிகளை முதல்வர்  இணைத்து கொள்ளாததால் அவர்கள் முதல்வருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் மேகதாது விவகாரம் பற்றி பேசினார்.அவர் பேசுகையில் மேகதாது அணை கட்டுவது என்பது விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனை.

இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து அல்லது கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம்.ஆனால் முதல்வரும் அவ்வாறு எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை செயல்படுத்தவில்லை.அதேபோல தமிழக விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வைப்பதும் தமிழக முதல்வரின் கடமையாகும்.இவ்வாறெல்லாம் செய்யாமல் மக்களின் கண்துடைப்புக்காக மேடைப் பேச்சை மட்டுமே பேசி வருகின்றனர்.

மேலும் அவர் கூறியதாவது, 2004ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா அவர்கள் காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக விவசாயிகளை  பிரதமரிடம் சந்திக்க வைத்தார்.அப்போது தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் விவசாயிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அவர் அவ்வாறு செய்யப்படாமல் இருந்திருந்தால் தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்திருக்காதுஎன்ற ஆதங்கத்துடன் கூறினார்.அதனால் முதல்வர் பிரதமரை சந்திக்கும் போது விவசாயிகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.