கும்பகோணத்தில் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆன முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது ஏன் இவையெல்லாம் இடம்பெறவில்லை என்பது குறித்து காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பதாவது :-
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தயிரும் தேனும் கலந்து ஊட்டி விட்டது நியாயமாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் ஆண்டிற்கு 12 லட்சம் சம்பாதிக்கக்கூடிய நபர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும் ஆனால் வரி விலக்கு மூலம் நாட்டில் இருக்கக்கூடிய 140 கோடி பேரில் ஒரு கோடி பேர் மட்டுமே பயனடைவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, வருமானத்துறையினர் குறித்து பேசி அவர் இந்தியாவில் இருக்கக்கூடிய வருமான வரித்துறை அதிகாரிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் எளிதாக எதிர் கட்சி தலைவர்கள் வீட்டில் எல்லாம் புகுந்து வரியைப் செய்து அமலாக்க துறையினரிடம் கொடுத்த நடவடிக்கை எடுப்பர் என்றும் ஆனால் அந்த வருமானவரித்துறை ஆனது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வரியை வசூல் செய்ய முடியவில்லை என கோபமாக தெரிவித்திருக்கிறார்.
அத்யாவசிய பொருட்களினுடைய விலையானது உயர்ந்துள்ளது இது தொடர்பாக பட்ஜெட்டில் எந்த விதமான அறிவிப்பும் இல்லை என்றும் சாதாரண மக்கள் முழித்திருக்கும் போது மட்டுமல்லாது அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் வரி செலுத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அவர்களுடைய வரியை செலுத்துவதற்கான அறிவிப்பு அல்லது அவர்கள் மீது வருமான வரியை போல் நடத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.