MR ராதா MGR- யை சுட்டதன் காரணம்? பெண் பிரச்சனையா? பண பிரச்சனையா?

0
5380
#image_title

எம்ஜிஆர் காலத்தில் ஒரு கட்டமைப்பு இருந்ததாம். அரசியல்வாதி அவர்கள் எதிரிகளாக இருந்தால் அவருடன் நட்பு பாராட்டி பிற்காலத்தில் அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நட்பு வைத்துக் கொள்வாராம்.

 

திரைத் துறையில் யார் அவரின் கருத்துக்கு ஒத்துக் கொள்கிறாரோ அவரையே நண்பராக ஏற்றுக்கொள்வாராம். அப்படி அவருக்கு மாறாக செயல்படுவர்களை அவரை திரை உலகில் இருந்து காலி செய்ய பல வியூகங்களை கட்டமைத்து அவரை இல்லாமலேயே ஆக்கிவிடுவாராம்.திரைப்பட துறையில் நிகழ்ந்த இந்த நாட்டாமையால், M.R. ராதா பாதிக்கப்பட்டதாக கூறியதை சாட்சியம் கொடுத்துள்ளார் அதை நேரில் பார்த்த பட தயாரிப்பாளர் வாசு

 

அப்படி ஒரு சம்பவம் தான் எம் ஆர் ராதாவிற்கு ஏற்பட்டது.  அதனால்தான் அவர் சுட்டார் என்று நீதிமன்றத்தின் வாக்குமூலமே உள்ளது.

 

எம்.ஜி.ஆர், M.R.ராதா-வினால் சுடப்பட காரணம் “பணப்பிரச்சினையே , இது நீதிமன்றதில் நடைப்பெற்ற வழக்கில் சொல்லப்பட்ட அதிகாரபூர்வ காரணம்.

ஆனால் அதுவே காரணமாக இருந்தாலும், அவர்களுக்குள் சில மனகசப்புகளும் இருந்திருக்கலாம் .

 

ஒருசமயம் கோர்ட்டில் MR  ராதா “உன்னால் எனக்கு நஷ்டம் உன்னால் பல படங்களில் என்னை நீக்கி விட்டார்கள்” என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்த பொழுது மிகவும் கோபப்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

 

பெற்றால்தான் பிள்ளையா என்ற ஒரு படத்தை தயாரிப்பதற்காக எம் ஆர் ராதா அவர்கள் ஒரு லட்ச ரூபாயை தயாரிப்பாளர் வாசு அவர்களிடம் கொடுத்துள்ளார்.  அந்த படம் வெளிவந்த பிறகு அந்த பணத்தை திருப்பி வாசுவிடம் இருந்து வாங்கி தருகிறேன் என்று எம்ஜிஆர் உறுதி செய்திருந்தார். அந்தப் பணம் வராததால் பண பிரச்சனையால் இருவருக்கும் தகராறு முற்றி எம்ஜிஆர் சுடப்பட்டுள்ளார்.

 

மேலும் விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம் திரைப்படத்தில் உதய சூரியனை காட்டி அரசியல் செய்யாதே என்று இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. இதனால் அரசியலிலும் மேலோங்கி இருக்கிறார் என்ற புகைச்சல் எம் ஆர் ராதாவிற்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

திரைத் துறையில் அவரது நாட்டாமை மேலோங்கி இருக்கும் நிலையில் அரசியலும் அவர் கைக்குள் போய் விடக்கூடாது என்று எண்ணம், ஏற்கனவே எம் ஆர் ராதாவிற்கு இருந்ததாகவும், இந்த “பெற்றால் தான் பிள்ளையா” என்ற பண பிரச்சனை இதை பெரிதாக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தன்னை தானே சுட்டுக்கொண்டு எம்ஜிஆர் தான் சுட்டார் என்ற வாதில் கூட அவர் தோற்று விட்டார்.