இதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? ஐகோர்ட் நீதிபதி கேள்வி!

0
135

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 50 ரூபாய் குறைந்து நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறந்தால் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய் என்று விற்பதற்கு தயார் என்று தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை அனுமதிக்க இயலுமா என்று கேள்வி எழுப்பினார். அதோடு விலை உயர்வை கருத்தில் கொண்டு வாகனம் மூலமாக தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு இதுதொடர்பாக 21ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிஎம்டிஏ மற்றும் காய்கறி சந்தை கமிட்டிக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.