கமல்ஹாசனுக்கு திமுகவில் இவ்வளவு சீட்டா! அசந்துபோன கூட்டணி கட்சிகள்!

0
142

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் மதுரையில் கடந்த 15ஆம் தேதி பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் கமல் தெரிவித்த வார்த்தைகள் அவர் கொடுத்த வாக்குறுதிகள் போன்றவை ஊடகங்களில் அதிக கவனம் பெற்றன தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது சாத்தியம் என்று தெரிவித்த கமல்ஹாசன், அதிமுக மற்றும் திமுக மீது விமர்சனங்களை வைத்திருந்தார். சமீபத்தில் கமலஹாசன் சீமான் மற்றும் ஓவைசி கூட்டணி உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையிலே, இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனின் வெற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தேர்தலில் ரஜினிகாந்த் கமலஹாசன் நடித்த தேதியில் எந்த ஒரு நடிகனும் இனிமேல் அரசியல் கட்சி தொடங்க கூடாது என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கமல்ஹாசனுடைய வீட்டிற்குச் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த சீமான், அண்ணன் கமல்ஹாசன் என்ற உரிமையுடன் அழைத்து அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்ற வாழ்த்தினார் அண்மை காலமாக ரஜினி அவர்களை மட்டுமே விமர்சனம் செய்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கமல்ஹாசனை சீமான் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்தபோது சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து சீமானிடம் கமல்ஹாசன் பேசியிருந்தார். இது தொடர்பான தகவலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சீமான் பகிர்ந்து இருக்கின்றார்.

இந்த முறை நாம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் மக்கள் நீதி மையம் மூலம் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட நம்முடைய கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்தார்.

ஆனாலும் இப்போது கமல்ஹாசன் ரஜினியிடம் தொடர்ச்சியாக ஆதரவு கேட்டு வருகிறார்.என்ற ஒரு பாகுபாடும் பார்க்காமல் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று கமல்ஹாசன் வெளிப்படையாகவே பேசியிருக்கின்றார். கமலஹாசன் அரசியல் வருகையை ஆதரித்து பேசிய சீமான் ரஜினிகாந்தின் அரசியல் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தார். ஆனாலும் தமிழ் மண்ணை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்ற விளக்கத்தை அவர் கொடுத்திருக்கின்றார்.

ஒருபுறம் சீமான் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் கமல் ஹாசன் ரஜினியுடன் இணைவதற்கு தயார் என்று அழகாகச் சொல்கிறார் அப்படியானால் ரஜினியை கடுமையாக எதிர்த்து வரும் ரஜினியுடன் எதற்க்காக கூட்டணி பற்றி பேச வேண்டும். ரஜினி உடனே கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கலாமே என்று கடுமையான விமர்சனங்கள் சீமான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

அதோடு திமுகவை ஒருபுறம் எதிர்ப்பதும். மறுபுறம் அந்த கட்சியுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக இருக்கின்ற அர்த்தம் என்ன என்று தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக கமல்ஹாசனுக்கு 25 இடங்கள் வரை தருவதற்கு திமுக தலைமையை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிகின்றது இதன் காரணமாக கமலஹாசனை எப்போதும் இல்லாத அளவிற்கு விமர்சனம் செய்திருக்கிறார் சீமான் என்று தெரிவிக்கிறார்கள் அந்தக் கட்சியினர்.