ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

0
183

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாஜகவின் முகம் என்றும், பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்றும், அதே போல் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவத்தை ஆதரிப்பவர் என்றும் எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வந்தன. மேலும் ரஜினி பாஜகவில் இணைந்து விடுவார் என்றும் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார். அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்னதாகவே அவர், ’தான் ஆதரவாளர் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் ரஜினிகாந்துக்கு அனைத்து மத இன ரசிகர்கள் இருப்பதால் அனைவரின் ஆதரவையும் பெற வேண்டும் என்பதே அவரது திட்டம்

இந்த நேரத்தில் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதிய ரஜினிகாந்த் இன்று தனது பேட்டியில் தான் பாஜக ஆதரவாளர் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்பார்த்தது போலவே ரஜினியின் இந்த பேட்டியை திமுக தவிர பாஜகவை பிடிக்காத அரசியல் கட்சிகள் வரவேற்று உள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் ரஜினியின் பேட்டியை பாராட்டியுள்ளன

திமுக இந்த பேட்டி கொடுத்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. குறிப்பாக திருவள்ளுவர் நாத்திகர்தான் என்று ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு திமுக உள்பட யாரும் பதில் கூறவில்லை என்பது தான் உண்மை. ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் என்ற கருத்துக்கு மட்டும் துரைமுருகன் பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினியின் இந்த பேட்டியில் இருந்து அவர் தான் எந்த கட்சிக்கும் ஆதரவாளர் இல்லை குறிப்பாக பாஜகவின் ஆதரவாளர் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது