Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீமான் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்தது ஏன்?

Naam Tamizhar katchi state executives, are stepping down from Seeman! The party breaks down?

Naam Tamizhar katchi state executives, are stepping down from Seeman! The party breaks down?

சீமான் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்தது ஏன்?

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியாக கமலுடைய கட்சியான மக்கள் நீதி மையம் கலந்து கொள்ள போகிறது. அதே போல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தேர்தலில் சந்திப்பார் என்று எதிர்பார்க்க பட்டது ஆனால் தனது உடல்நிலை குறைவால் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான திரு சகாயம் அவர்கள் கட்சி ஆரம்பிக்க போவதாக இரு தினங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசி இருந்தார்.அவர் பேசியதாவது இளைஞர்களின் அழைப்பை ஏற்று நான் அரசியலுக்கு வருவேன் என்றும், என்னுடைய முக்கிய குறிக்கோள் தமிழகத்தில் ஊழலை ஒழிப்பது, இதுதான் என்னுடைய முக்கியமான இலக்கு அதை நோக்கி தான் என்னுடைய அரசியல் பாதை அமையும் என்று பேசியிருந்தார்.

சகாயம் அவர்களின் அரசியல் அறிவிப்புக்கு பல்வேறு இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களை அரசியலுக்கு வாருங்கள் என்று முதன் முதலில் வரவேற்றவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால் தற்பொழுது சகாயம் அவர்கள் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லும் போது அவரை சந்தித்து அரசியல் வியூகங்களை அமைக்காமல் ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஜெயலலிதா அவர்களின் தோழியான சசிகலா அவர்களே சந்தித்து இருக்கிறார் சீமான்.

இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சசிகலாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தான் நடக்கிறது என்று பலர் தங்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இதைப்பற்றி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரிடம் கேட்டபோது அண்ணன் சீமான் அவர்கள் எப்பொழுதே தனித்து தேர்தலில் களம் காண போவதாக அறிவித்துவிட்டு விட்டார் .அதனால் சசிகலாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இது அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை உடல் நலம் விசாரிக்கவே சீமான் அவர்கள் சென்றிருக்கிறார்.

மேலும் திரு சகாயம் ஐயா அவர்களே விரைவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சந்தித்து அரசியலில் அவருடைய ஆதரவை பெறுவார் என்று கூறுகிறார்கள்.ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சசிகலா அவர்களே சந்தித்தார். தற்பொழுது சீமான் அவர்களும் மற்றும் இயக்குனர் சிகரம் பாரதிராஜா உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்திருக்கிறார்.

சசிகலாவை சந்தித்த பிறகு பேட்டி அளித்த பாரதிராஜா ஒரு சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன் இப்போது பார்த்து விட்டேன், இவர் தமிழகத்திலுள்ள வெற்றிடத்தை நிரப்புவார் என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதே போல் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் சசிகலாவை இன்னும் ஓரிரு தினங்களில் சந்திக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.

சசிகலாவின் வருகையானது தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version